கொழும்பு பங்குச்சந்தையின் விலைச்சுட்டெண் இன்று மீண்டும் அதிகரித்துள்ளது.
இன்றைய கொடுக்கல் வாங்கல் முடிவின் படி பங்குகளின் விலைச்சுட்டி 13,000 ஐ கடந்துள்ளது.
இந்த விலைச்சுட்டி நேற்றைய தினத்திலும் பார்க்க 2.1 வீதம் அதிகரித்துள்ளது.
இன்று (05) கொழும்பு பங்குச்சந்தையின் மொத்த பிறழ்வு 15.56 பில்லியனை கடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது



















