களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலையத்தில் செயலிழந்துள்ள மின்பிறப்பாக்கியை சீரமைக்க காலதாமதம் ஏற்படுமென்பதால் இன்றும் (07) மின்விநியோகத்தடை நடைமுறைப்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
குறித்த மின் உற்பத்தி நிலையத்தில் உள்ள மின்பிறப்பாக்கி ஒன்றில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, நேற்றிரவு நாட்டின் சில பாகங்களில் மின் தடை ஏற்பட்டது.
இந்த நிலையில், செயலிழந்துள்ள மின்பிறப்பாக்கியை சீரமைப்பதற்கான பணிகள் நேற்றிரவு முதல் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
எனினும் செயலிழந்துள்ள மின்பிறப்பாக்கியை சீரமைக்க காலதாமதம் ஏற்படுமென்பதால் இன்றும் மின்சார விநியோகத்தடை ஏற்படக்கூடும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.