எரிவாயு விலை உயர்வையடுத்து கஜகஸ்தானில் ஏற்பட்ட போராட்டத்தையடுத்து பொலிஸார் உட்பட 12 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
எண்ணெய் வளமிக்க மத்திய ஆசிய நாடான கஜகஸ்தானில் கார்களுக்கு பெரும்பாலும் திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு எரிபொருளாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, கஜகஸ்தான் அரசு இந்த எரிபொருள் மீதான விலையை அண்மையில் உயர்த்தியது மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனால் எரிபொருள் விலை உயர்வைக் கண்டித்து போராட்டம் வெடித்தது.