யாழ்.நகர எல்லைக்குள் ´எனோபீலிஸ் டிபென்ஸி´ எனப்படுகின்ற புதிய வகை மலேரியா நுளம்பொன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ள புதிய வகை நுளம்பின் தாக்கத்தினால் ஏற்படும் அனர்த்த நிலை கடினமாக இருக்கும் என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர் ஏ. கேதீஷ்வரன் தெரிவித்துள்ளார்.
தென் ஆபிரிக்காவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள சிலருக்கு மலேரியா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், தற்போது அடையாளம் காணப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் விசேட சைவத்திய நிபுணர்கள் ஆராய்ந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, யாழ்ப்பாண நகர எல்லையில் அடையாளம் காணப்பட்டுள்ள இந்த நுளம்ப துரிதமாக பரவும் அபாய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.