இலங்கை மத்திய வங்கியிடம் காணப்பட்ட தங்க கையிருப்பு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மொத்த தங்க கையிருப்பில் அரைவாசி அளவில் மத்திய வங்கி விற்பனை செய்துள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஸ டி சில்வா தெரிவித்துள்ளார்.
இதன்படி, கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் மாதம் 21ம் திகதி மத்திய வங்கியிடம் 382.2 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான தங்க கையிருப்பு காணப்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் 21ம் திகதி இந்த கையிருப்பின் பெறுமதி 175.4 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரையில் குறைவடைந்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
டுவிட்டர் பதிவு ஒன்றின் மூலம் அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார். இந்த குற்றச்சாட்டு குறித்து இதுவரையில் இலங்கை மத்திய வங்கி எவ்வித பதிலையும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.