பொது இடங்களுக்கு செல்வதற்கு பூஸ்டர் தடுப்பூசி கட்டாயமாக்கப்படும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சில் நடைபெற்ற கூட்டமொன்றில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
க்யூ.ஆர் (QR Code) கோட் உள்ளடங்கிய புதிய தடுப்பூசி அட்டையும் தடுப்பூசி செயலியும் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அனைத்து உள்ளுராட்சி மன்றங்களையும் தடுப்பூசி நிலையங்களாக மாற்றுவதற்கு திட்டமிடப்பட்டள்ளதாகவும், இதன் மூலம் தடுப்பூசி ஏற்றுகையை துரிதப்படுத்த முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுவரையில் நாட்டில் 28 வீதமானவர்கள் பூஸ்டர் தடுப்பூசியை ஏற்றிக்கொண்டுள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.