கடந்தாண்டு நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின்தடை புத்திசாலித்தனமான குற்றவாளிகளால் மேற்கொள்ளப்பட்ட சதி மற்றும் நாசகார செயல் என இலங்கை மின்சார தொழிற்சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது.
மின்வெட்டு தொடர்பில் வெளியிடப்பட்ட குழு அறிக்கையும் மின்வெட்டு சதிச் செயல் என சுட்டிக்காட்டியுள்ளதாக சம்மேளனத்தின் தலைவரான மாலக்க விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
காலியில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,
கடந்தாண்டு நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின்தடை ஒரு சதியாகும்.குற்றத்தை செய்தவர்கள் சாதாரணமானவர்கள் அல்ல. புத்திசாலித்தனமான குற்றவாளிகள்.அவர்களைப் பிடிப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மின்சார மாஃபியா செயற்பாட்டில் இருப்பதாகவும் , குற்றவாளிகள் வழக்கத்திற்கு மாறான வழிகளில் பொது மக்களின் சொத்துக்களை திருடுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.



















