நாட்டில் விசேட தடுப்பூசி வாரமொன்று அறிமகம் செய்யப்பட்டுள்ளது என சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
எதிர்வரும் 17ம் திகதி வரையில் இந்த தடுப்பூசி வார செயற்திட்டம் அமுல்படுத்தப்பட உள்ளது.
சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவிற்குள் மேலும் நான்கு தடுப்பூசி மத்திய நிலையங்கள் இயங்கும்.
தடுப்பூசி ஏற்றப்படும் வைத்தியசாலைகளில் இரவு 8.00 மணி வரையில் தடுப்பூசி ஏற்றப்படும் என தெரிவித்துள்ளார்.