விமர்சனங்கள் முன்வைக்கப்படுவது அரசியலில் இயல்பானதொரு விடயமாகும். விமர்சனங்கள் என்பவை எனது அரசியல் வாழ்க்கையில் பழக்கப்பட்ட ஒன்றாகும். அவற்றை நான் பெரிய அளவில் கவனத்தில் கொள்ளவதில்லை. எனவே முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க என்னைப்பற்றி கூறிய விடயங்களை நான் செவிமடுக்கவில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்றையதினம் இடம்பெற்ற நிகழ்வொன்றின்போதே மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்படுவது அரசியலில் இயல்பானதொரு விடயமாகும். அது புதுமையானதொரு விடயமல்ல. நாம் அவற்றுக்கு நன்றாக பழக்கப்பட்டுள்ளோம். அரசியல்வாதி என்பவர் அனைத்து சந்தர்ப்பங்களிலும் விமர்சனங்களுக்கு உள்ளாகுபவராவார்.
முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க என்னைப்பற்றி கூறிய விடயங்களை நான் செவிமடுக்கவில்லை. அவை குறித்து ஆராய வேண்டும். எனது பெயர் , பிறந்த நாள், பிறந்த இடம், முகவரி மற்றும் தேசிய அடையாள அட்டை இலக்கம் என்பனவே என்னைப்பற்றிய தகவல்களாகும்.
எனவே என்னைப்பற்றிய தகவல்களை வெளியிடுவதாயின் இவற்றையே வெளிப்படுத்த வேண்டும். விமர்சனங்கள் என்பவை எனது அரசியல் வாழ்க்கையில் பழக்கப்பட்ட ஒன்றாகும். அவற்றை நான் பெரிய அளவில் கவனத்தில் கொள்ளவதில்லை என குறிப்பிட்டார்.