இலங்கையில் எதிர்வரும் நாட்களில் 24 மணிநேர மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.
மின்சாரம் இல்லாமையினால் நாட்டை மூடி வைக்கும் நாள் வெகு விரைவில் உள்ளதென அதன் பிரதான செயலாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார்.
மின்சாரத் துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு அரசாங்கம் தீர்வைக் காண முடியாமல் இருப்பதே இந்த நிலைக்குக் காரணம் என ரஞ்சன் ஜயலால் சுட்டிக்காட்டியுள்ளார்.
மிகவும் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. மழையும் இல்லாத காலநிலை ஒன்றே இந்த வருடம் ஆரம்பம் முதல் காணப்படுகின்றது. இதனால் மின்சாரம் போதுமான அளவு வழங்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
மின்சாரம் இல்லாத நிலைமை சமாளிக்க முடியாது. கடந்த காலங்களில் கொரோனா தொற்று பரவலினால் நாடு மூடப்பட்டதனை போன்று மின்சாரம் இல்லாத காரணத்திற்காக நாடு மூடப்படும்.
எரிவாயு, பால் மா வரிசை போன்று மின்சார தடைக்கும் ஏதாவது ஒரு வரிசையில் நிற்க வேண்டிய நிலைமை எதிர்வரும் நாட்களில் ஏற்படும்.
நாட்டில் இந்த நாட்களிலும் ஏற்படும் மின் தடை தொடர்பில் அதிகாரிகள் தெரிவித்துவரும் கருத்துக்கள் முரண்பாடானவை என செயலாளர் ரஞ்சன் ஜயலால் மேலும் தெரிவித்தார்.