4,000 போதை மாத்திரைகள் அடங்கிய பொதியொன்று சுங்க அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த பொதியானது நெதர்லாந்திலிருந்து அனுப்பப்பட்டுள்ள நிலையில், மத்திய தபால் பரிமாற்றத்தில் வைத்து கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.



















