மைத்திரிபால சிறிசேனவை திட்டமிட்ட அடிப்படையில் சிறையில் அடைப்பதற்கான சதி நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
இதன் பின்னணியில் செயற்படுபவர்கள் யார் என்பதும் எமக்குத் தெரியும். நேரம் வரும்போது விபரம் வெளியிடப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.