கடந்த மாதம் கனடா – மிசிசாகாவில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த 35 வயதான இலங்கை தமிழர் ஒருவரின் குடும்பத்தினரும், பொலிஸாரும் சந்தேக நபரை அடையாளம் காண பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர்.
இந்த விபத்து கடந்த (டிசம்பர் ) மாதம் 17ம் திகதி Dundas – Dixie சாலை பகுதியில் இடம்பெற்றுள்ளது. விபத்தில் உயிரிழந்த சுரேஷ் தர்மகுலசிங்கம், அருகில் உள்ள உணவகத்தில் தேனீர் வாங்கிக் கொண்டு அந்தச் சந்திப்பைக் கடந்து கொண்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
தர்மகுலசிங்கம் 2010ம் ஆண்டு கனடாவிற்கு குடிபெயர்ந்ததாகவும், அவர் லொறி சாரதியாக பணியாற்றியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அந்தப் பகுதியில் உள்ள எரிவாயு நிலையத்தில் நிறுத்தி வைத்திருந்த தனது லொறியை நோக்கிச் தர்மகுலசிங்கம் சென்று கொண்டிருந்தபோது, 2008-2012 Ford Escape SUV என்ற கார் அவர் மீது மோதியுள்ளது.