அல்லு அர்ஜுன் நடிப்பில் இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் வெளியாகி பிளாக் பஸ்டர் வெற்றியடைந்துள்ள திரைப்படம் தான் புஷ்பா.
இப்படம் இந்தியளவில் 5 மொழிகளில் வெளியாகி பெரியளவில் வசூல் சாதனை படைத்துள்ளது.
புஷ்பா திரைப்படம் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற அப்படத்தில் அமைந்துள்ள பாடல்களும் ஒரு காரணம்.
அப்படத்தில் இடம் பெற்றுள்ள ஒரு பாடலுக்கு சமந்தா ஆடிய நடனம் சென்சேஷனல் ஹிட்டானது. அந்த ஒரு பாடலுக்கு சமந்தா நடனமாட ரூ 1.5 கோடி சம்பளம் வாங்கியதாக முதலில் கூறப்பட்டது.
ஆனால் தற்போது சமந்தா உண்மையில் ரூ. 5 கோடியை சம்பளமாக கேட்டு வாங்கியதாக கூறப்படுகிறது.
சமந்தா முதலில் அப்பாடலுக்கு நடனமாட தயங்கியதாகவும், அல்லு அர்ஜுன் தான் அவரை சமாதானம் செய்து ஆட வைத்ததாக கூறப்படுகிறது.