எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனம் இலங்கைக்கான விமான சேவைகளை அதிகரிப்பதாக அறிவித்துள்ளது.
இதேவேளை, வாரத்திற்கு இயக்கப்படும் விமானங்கள் எண்ணிக்கையை 26 ஆக அதிகரிப்பதாக எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது.
மேலும், வாரந்தோறும் பெப்ரவரி 10ஆம் திகதி முதல் கொழும்புக்கு செல்லவுள்ளதோடு, இலங்கைக்கான மொத்த விமானங்களின் எண்ணிக்கை 26ஆம் திகதி வரை உயரும் என அறிவித்துள்ளது,
எமிரேட்ஸ் புதிய விமானங்களை ஒவ்வொரு செவ்வாய், வியாழன், வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையும் கொழும்புக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில், EK654 Emirates விமானம் துபாய் விமான நிலையத்திலிருந்து 10.35 மணித்தியாலங்களுக்குப் புறப்பட்டு 16.25 மணித்தியாலங்களுக்கு கொழும்பு சென்றடையும்,
மற்றும் EK 655 விமானங்கள் கொழும்பில் இருந்து 22.05 மணித்தியாலங்களுக்குப் பயணித்து 01.55 மணிநேரத்திற்கு துபாய் சென்றடையும் என தகவல் வெளியாகியுள்ளது.