வாய் துர்நாற்றம் பலருக்கும் பல சூழ்நிலைகளில் தர்ம சங்கடத்தை உண்டாக்கக்கூடிய நிலை. ஒருவரது வாயில் இருந்து வீசும் துர்நாற்றம், அவர்களது அருகில் இருப்போரின் முகத்தை சுளிக்க வைப்பதுடன், அவர்களுடன் எப்போதும் ஒருவித இடைவெளியை பராமரிக்க வைக்கும்.
வாய் சுகாதாரம் ஒருவருக்கு மிகவும் முக்கியமானது. உங்கள் வாயில் இருந்து துர்நாற்றம் வீசாமல் இருக்க வேண்டுமானால் ஒவ்வொரு நாளும் வாயை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட வேண்டும்.
ஒருவரது வாய் துர்நாற்றத்திற்கு பல காரணங்கள் உள்ளன. அதே சமயம் வாய் துர்நாற்றத்தைத் தடுக்க பல வழிகளும் உள்ளன. வாய் துர்நாற்றத்தைத் தடுப்பதற்கான சில வழிகளை பற்றி இந்த வீடியோவில் பார்க்கலாம்..




















