நடிகை சமந்தா நாக சைதன்யாவுடன் விவாகரத்து அறிவிப்பை வெளியிட்ட பின், சுதந்திரமாக படங்களில் நடிப்பதும், சுற்றுலா சென்று புகைப்படத்தை வெளியிட்டும் வருகிறார்.
என்னதான் இவர்களை பற்றி அன்றாடம் ஏதாவது ஒரு தகவல்கள் உலா வந்தாலும், அண்மையில் சமந்தா இன்ஸ்டாகிராமில் நாக சைதன்யாவுடன் இருந்த புகைப்படங்களை அனைத்தையும் நீக்கினார்.
இது ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் இதுகுறித்து, தற்போது ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அது, “தேவையில்லாத விஷயங்கள் எல்லாம் இடத்தை அடைத்துக் கொண்டிருக்கிறது என்று நீக்கியது தான் காரணமாம். தனக்கு தேவையில்லாத எதுவும் இன்ஸ்டாகிராமில் இருக்கக் கூடாது” என்ற நோக்கத்தில் தான் அந்த பிரிவு அறிவிப்பை நீக்கினாராம் சமந்தா.