பிட்காயின் மதிப்பு தற்போது தொடர் சரிவை சந்தித்ததால், முதலீட்டாளர்கள் கடும் அதிருப்தியில் மூழ்கியுள்ளனர்.
ஓமிக்ரோன் மூலம் ஏற்பட்ட பாதிப்பு உலக நாடுகளைத் தனது நாணய கொள்கையைக் கட்டாயம் மறுசீரமைப்புச் செய்ய வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டது. மேலும், பிட்காயின் மதிப்பானது. யாரும் எதிர்பார்க்காத வகையில் சுமார் 9.5 சதவீதம் வரையில் சரிந்து 37,945.56 டாலர் வரையில் சரிந்தது.
இந்த சரிவுக்கு ரஷ்யா மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகள் பிட்காயின் மற்றும் கிரிப்டோகரன்சிக்கு எதிராக எடுத்த முடிவு தான் முக்கியக் காரணம் எனக்கூறப்படுகிறது. ரஷ்யாவில் நிதியியல் நிலைத்தன்மை, மக்களின் நலன் மற்றும் நாணய கொள்கையின் இறையாண்மை ஆகியவற்றைக் காக்க வேண்டும் என்பதற்காகவும் பொருளாதாரத்தில் எவ்விதமான பாதிப்பும் ஏற்படக் கூடாது என்பதற்காக ரஷ்ய நாட்டில் கிரிப்டோகரன்சி பயன்படுத்தவும், உற்பத்தி செய்யவும் தடை விதிக்கும் கொள்கையைத் தாக்கல் செய்துள்ளது.
மேலும், பாகிஸ்தான் அனைத்து கிரிப்டோகரன்சிகளின் பயன்பாட்டையும் தடை செய்ய முடிவு செய்துள்ளது, என அந்நாட்டின் சிந்து உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாக அந்நாட்டுப் பத்திரிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
கிரிப்டோவின் விலை விபரம்;
பிட்காயின் 8.68% சரிந்து 38398.94 டாலராக உள்ளது.
எதிரியம் 11.24% சரிந்து 2786.46 டாலராக உள்ளது.
டெதர் 0.01% உயர்ந்து 1 டாலராக உள்ளது.
பினான்ஸ் காயின் 9.99% சரிந்து 416.72 டாலராக உள்ளது.
USD காயின் 0.04% உயர்ந்து 0.9999 டாலராக உள்ளது.
கார்டானோ 11.09% சரிந்து 1.2 டாலராக உள்ளது.
சோலானோ 14.26% சரிந்து 117.94 டாலராக உள்ளது.
ரிப்பிள் 8.83% சரிந்து 0.6772 டாலராக உள்ளது.
டெரா 9.98% சரிந்து 73.71 டாலராக உள்ளது.
போல்காடாட் 11.08% சரிந்து 21.76 டாலராக உள்ளது.
டோஜ்காயின் 8.11% சரிந்து 0.1511 டாலராக உள்ளது.
அவலான்சி 14.26% சரிந்து 72.49 டாலராக உள்ளது.
பினான்ஸ் USD 0.12% சரிந்து 0.9987 டாலராக உள்ளது.
பாலிகான் 11.29% சரிந்து 1.84 டாலராக உள்ளது.
ஷிபா இனு 10.16% சரிந்து 0.00002489 டாலராக உள்ளது.
டெரா USD 0.35% சரிந்து 0.9978 டாலராக உள்ளது.