கொரோனா வைரஸ் தமிழகத்தில் அதிகரித்து வரும் நிலையில், இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமை முழு நேர ஊரடங்கும் தற்போது அமலில் உள்ளது.
இந்த நிலையில், கொரோனாவால் பல திரைப்பிரலங்கள் அன்றாடம் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், மலையாள நடிகர் ஜெயராம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.
அவர் கூறியதாவது,. கடந்த 2 நாட்களாக உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதற்காக மருத்துவ பரிசோதனை செய்த போது கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதற்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறேன் எனத்தெரிவித்துள்ளார். இதேப்போல், நகைச்சுவை நடிகராகவும், இயக்குனராகவும் பணியாற்றி வருபவர் எஸ்.வி.சேகர். அவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இவரும், இரண்டு தடுப்பூசி போட்டுக்கொண்டதால் டாக்டரின் அறிவுறுத்தல் படி அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொண்டுள்ளார்.