கல்விப் பொதுத் தராதர உயர் தரப்பரீட்சைக்கு தயாராகி வரும் பாடசாலை மாணவர்களிடம் பரீட்சைகள் ஆணையாளர் எல்.எம்.டி. தர்மசேன முக்கிய கோரிக்கையொன்றினை முன்வைத்துள்ளார்.
கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சை எதிர்வரும் பெப்ரவரி 7 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், வகுப்பறை இறுதி நாட்களில் எந்த பிரியாவிடை நிகழ்வுகளையும் நடாத்த வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
நாட்டில் தற்போது வேகமாக கோவிட் 19 தொற்று பரவுவதை கவனத்தில் கொண்டு இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் அவ்வாறான பிரியாவிடை நிகழ்வுகளில் ஒன்று சேர்வதன் மூலம் கோவிட் தொற்று பரவலுக்கான அச்சுறுத்தல் காணப்படுவதாகவும், தொற்று பரவல் ஏற்படின் மாணவர்களால் பரீட்சைகளுக்கு முகம் கொடுக்க முடியாமல் போகலாம் என்பதை கருத்திற்கொண்டு இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இதனைவிட, பரீட்சைகளுக்கான அனுமதி அட்டைகளை மாணவர்களிடம் கையளித்த பின்னர், எந்த காரணத்துக்காகவும் மாணவர்களை பாடசாலையில் தரித்திருக்க அனுமதிக்க வேண்டாம் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் அனைத்து பாடசாலைகளினதும் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் பாடசாலையில் உயர்தர மாணவர்கள் பங்கேற்கும் நிகழ்வுக்கு ஒன்றுக்காக ஆடை வாங்கச் சென்ற நிலையில்,கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற ரயிலில் மோதுண்டு மாணவன் ஒருவர் பலியாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.