பேலியகொடை மெனிங் சந்தையில் மரக்கறிகளின் விலைகள் கடந்த சில நாட்களை விட மீண்டும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மலையகத்தில் இருந்து வரும் மரக்கறிகளின் அளவில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளமையே இந்த விலை அதிகரிப்புக்கு காரணம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த சில மாதங்களாக உரப் பிரச்சினை, வெள்ள அனர்த்தம் காரணமாக நாட்டில் மரக்கறிகளின் மொத்த விற்பனை விலைகள் கடுமையாக உயர்ந்திருந்தன. இவ்வாறு நாளுக்கு நாள் மரக்கறிகளின் விலை பாரியளவில் அதிகரித்திருந்த நிலையில்,மக்கள் பெரும் சிரமத்தை எதிர்நோக்கி வந்தனர்.
பண்டிகை காலம் நிறைவடைந்துள்ள நிலையில், நுவரெலியாவில் மரக்கறி விலை ஓரளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளதாகவும், விவசாயிகளின் கொள்வனவு விலையும் குறைந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இவ்வாறான நிலையில்,தற்போது மீண்டும் கொழும்பில் மரக்கறிகளுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பேலியகொடை மெனிங் வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாக மரக்கறிகளுக்கு தட்டுப்பாடு நிலவியமையினால் பொது மக்கள் பருப்பு மற்றும் உருளைக்கிழங்கு ஆகியவற்றை அதிகளவாகக் கொள்வனவு செய்த காரணத்தினால் மரக்கறிகளின் விலைகள் சடுதியாக குறைந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.