நீர்கொழும்பு பிரதேசத்தில் அடையாளம் தெரியாத இரு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
நீர்கொழும்பு குடபடுவ பிரதேசத்திலும் நீதிமன்ற வீதியிலும் 65 வயது மற்றும் 75 வயதுடைய முதியவர்களின் சடலங்களே கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நீர்கொழும்பு குடபடுவ பிரதேசத்தில் கண்டெடுக்கப்பட்ட சடலம் 4 அடி 6 அங்குல உயரம் கொண்ட ஆண் ஒருவருடையது மற்றும் அவரது தலைமுடி குட்டையாக வெட்டப்பட்டிருந்தது.
அவர் கடைசியாக கருப்பு நிற ஆடையை அணிந்திருந்தார். நீர்கொழும்பு மேல் நீதிமன்ற வீதியில் கண்டெடுக்கப்பட்ட சடலம் சுமார் 4 அடி 5 அங்குல உயரம் கொண்ட ஆண் ஒருவருடையது மற்றும் அவரது தலைமுடி குட்டையாக வெட்டப்பட்டிருந்தது.
அவர் கடைசியாக வெள்ளை நிற ஆடையை அணிந்திருந்தார். இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.



















