ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்ற தொடரான பாக்கியலட்சுமியில் கோபிக்கும், ராதிகாக்கும் திருமணம் நடந்து விட்டதாக வெளியான புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
குடும்ப தலைவியின் பிரச்சனைகளை உணர்த்தும் சீரியல் பாக்கியலட்சுமி, இந்த சீரியலில் பாக்கியலட்சுமியின் கணவர் கோபிக்கு, ராதிகா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்படுகிறது.
குடும்பத்தை ஏமாற்றி கொண்டு அந்த பெண்ணுடன் பழகி வரும் கோபி, எப்போது சிக்குவார் என ரசிகர்கள் எதிர்ப்பார்த்துள்ளனர்.
இதுதொடர்பாக நிறைய மீம்ஸ்கள், வீடியோக்கள் வெளியாவது வழக்கம், அப்படி சமீபத்தில் வெளியான புகைப்படம் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
அதாவது மாலையும் கழுத்துமாக கோபியும், ராதிகாவும் நிற்க திருமணம் முடிந்து விட்டதாக காட்டப்படுகிறது.
இதை உண்மை என நம்பிய பலரும், கோபி – ராதிகா காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பாக்கியலட்சுமிக்கு ஆதரவு தெரிவித்தும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
இது பொய் என்றாலும் விரைவில் கோபி, பாக்கியலட்சுமியிடம் மாட்டிக்கொள்ளும் தருணத்திற்காக காத்திருக்கின்றார்களாம் ரசிகர்கள்.
வச்சான் பாரு ஆப்பு.. 😀
பாக்கியலட்சுமி – இன்று இரவு 8:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #Baakiyalakshmi #VijayTelevision pic.twitter.com/FKozlnCMnZ
— Vijay Television (@vijaytelevision) January 21, 2022




















