கோவிட் தொற்றின் விகிதாசாரம் உலகளவில் அதிகரித்த வண்ணம் உள்ளது.அதிலும் குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் மற்றும் அமெரிக்கக் கண்டத்திலும் அதிகளவில் அதன் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என ஜேர்மனியில் இருக்கக்கூடிய நரம்பியல் சத்திர சிகிச்சை நிபுணராக இருக்கக்கூடிய வைத்தியர் அருணி வேலழகன் தெரிவித்துள்ளார்.
விசேட நேர்காணல் ஒன்றில், இன்றைய சூழ்நிலையில் கோவிட்டின் நிலைமை எப்படி இருக்கிறது? என வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கோவிட் தொற்று பரவுவதற்கும் அதன் வீரியத்துக்கு வித்தியாசமுள்ளது. அதேபோல் டெல்டாவின் போது இருந்த பாதிப்பை விட ஒமிக்ரோனின் போது பாதிப்பு குறைவாக உள்ளது என்ற பரவலான கருத்து உள்ளது.



















