அவுஸ்திரேலியா – சிட்னியைச் சேர்ந்த தமிழ் சிறுவன் drums வாத்தியத்தில் புதிய முயற்சியை மேற்கொண்டு கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட பிரிதீஷ் A R என்ற 12 வயது சிறுவனே இந்த சாதனையை படைத்துள்ளார்.
Drums வாத்தியத்தில் ஒரு நிமிடத்தில் 2370 drumbeats-ஐ வாசித்ததன் மூலம் இந்த சாதனை நிலைநாட்டப்பட்டிருக்கின்றது.
இதற்கு முன்னர் ஒரு நிமிடத்தில் 2109 drumbeats பதிவு செய்யப்பட்டமையே சாதனையாக காணப்பட்ட நிலையில் அதனை பிரிதீஷ் முறியடித்துள்ளார்.
கடந்த 2020 ஆண்டில் drums வாத்தியம் தொடர்பிலான Trinity College of London தரம் 8 பரீட்சையில் சித்தியடைந்துள்ளார். அதன்பின்னர், 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மேற்படி கின்னஸ் சாதனையை நிகழ்த்தியுள்ளார்.