சன் டிவி-ல் ஒளிபரப்பாகி வரும் தொடர் கயல், இத்தொடரில் நடித்து வரும் நடிகை அபி நவ்யா. இவருக்கும், ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் ‘என்றென்றும் புன்னகை’ தொடர் நாயகன் தீபக்கிற்கும் இன்று சென்னையில் திருமணம் நடைபெற்றுள்ளது.
காதலித்து திருமணம் செய்துகொண்ட இவர்களின் திருமனதிக்ரு சின்னத்திரையை சேர்ந்த பல நடிகர்களும் கலந்து கொண்டுள்ளனர்.
டிக் டாக் மூலம் பிரபலமான தீபக், சின்னத்திரையில் திருமணம் என்ற சீரியலின் மூலம் அறிமுகமானார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘ஈரமான ரோஜாவே சீசன் 2’விலும் இவர் நடித்து வருகிறார்.
மேலும் அபி நவ்யா ஜெ தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராகவும் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.