2021, தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை விரைவில் வௌியிடுவதற்கு எதிர்பார்த்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய, தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை ஒரு மாதம் 10 நாட்களுக்குள் வௌியிடுவதற்கு எதிர்பார்ப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் நாளைய தினம் (31) ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடளாவிய ரீதியில் 2021 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை 22 ஆம் திகதி நடைபெற்றிருந்தது.
இம்முறை தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் சிங்கள மொழி மூலம் 255062 மாணவ,மாணவியரும், தமிழ்மொழி மூலம் 85446 மாணவ மாணவியரும், பரீட்சைக்காக தோற்றியுள்ளதுடன், 2943 பரீட்சை நிலையங்களில் பரீட்சை நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.