நடிகர் விஷ்ணு விஷால் நடித்து பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘எப்.ஐ.ஆர்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
ரசிகர்களால் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட இப்படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. வருகிற பிப்ரவரி 11-ந்தேதி ‘எப்.ஐ.ஆர்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. கொரோனா பாதிப்பின் காரணமாக முதலில் ஓடிடியில் வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்த நிலையில் தற்போது தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால் திரையரங்குகளில் வெளியிட முடிவு செய்துள்ளது.
இப்படத்தை நடிகர் உதயநிதியின் சொந்த நிறுவனமான ரெட் ஜெயிண்ட் மூவிஸ் ரிலீஸ் செய்வது குறிப்பிடத்தக்கது.