அடுத்த ஜனாதிபதி யார் என்று போட்டி போடுவதை விடுத்து எதிர்வரும் தேர்தல் சம்பந்தமாக எதிர்க்கட்சியின் அரசியல் கட்சிகள் வட்டமேசை பேச்சுவார்த்தையை நடத்துவது அவசியம் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன (Rajitha Senaratne) தெரிவித்துள்ளார்.
அடுத்த ஜனாதிபதி ராஜிதவா,சஜித்தா, பாட்டலியா,அனுரவா என்பது மக்களுக்கு தேவையில்லாத விடயம் என்பதை அனைவரும் புரிந்துக்கொள்ள வேண்டும் எனவும் மக்கள் அடுத்த ஜனாதிபதி யார் என்பது பற்றிய சிந்தனையில் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
கொழும்பு மாக்ஸ் பெர்னாண்டோ மாவத்தையில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
தலைவலிக்கு தலையணையை மாற்றுவதற்கு பதிலாக இந்த கொடுங்கோன்மை அரசாங்கத்தை விரட்டியடித்து, மக்களாட்சி அரசாங்கத்தை ஏற்படுத்த அனைவரும் ஓரிடத்தில் கூடி பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க வேண்டும் ராஜித குறிப்பிட்டுள்ளார்.