இலங்கையில் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அமெரிக்க டொலர்களை செலுத்தி அமெரிக்க டொலரில் வரி செலுத்துமாறு இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் முன்வைத்த யோசனைக்கு நிதியமைச்சு இதுவரை பதிலளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பான பிரேரணை நிதியமைச்சகத்திடம் சமர்ப்பிக்கப்பட்டு மூன்று மாதங்களுக்கும் மேலதிக காலம் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு வாகனங்களை இறக்குமதி செய்வதன் மூலம் நாட்டில் ஏற்பட்டுள்ள வாகன இறக்குமதி நெருக்கடிக்கும், டொலர் பிரச்சினைக்கும் ஒரே நேரத்தில் தீர்வு காண முடியும் என மத்திய வங்கியின் ஆளுநர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டிலுள்ள வாகன இறக்குமதியாளர்களும் இது தொடர்பில் சாதகமான பதிலளித்துள்ளதுடன் அதற்கு அவர்கள் தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.