அனைத்து இன, அனைத்து மத மக்களும் ஒன்றாக வாழக்கூடிய வகையிலான அரசியல் அமைப்பு உருவாக்கப்பட வேண்டுமென அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் அரசியல் அமைப்பு முடிச்சு ஒன்றைப் போட்டு ஆட்சியில் நீடிக்க முயற்சிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுமத்திய குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையில் அவர் ஊடகங்களிடம் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்,
அடுத்த ஆண்டில் உள்ளுராட்சி மன்ற அல்லது மாகாணசபைத் தேர்தலை நடாத்த வேண்டும்.
இந்த நாட்டில் புதிய அரசியல் அமைப்பின் தேவை காணப்படுகின்றது. தேர்தல் காலங்களிலும் நாம் இதனைனக் கூறியிருந்தோம்.
ஜயம்பதி விக்ரமரட்னவை நாடாளுமன்றில் ஐந்து ஆண்டுகள் வைத்துக் கொண்டு அரசியல் அமைப்பை மாற்றுவதாக சிலர் காலத்தை விரயமாக்கின்றனர்.
இன்றைய காலத்திற்கு ஏற்ற வகையில் அனைத்து இன, மத மக்களும் ஒன்றாக வாழக்கூடிய வகையிலான சூழ்லையை உருவாக்கும் அரசியல் அமைப்பு ஒன்று இந்த நாட்டில் உருவாக்கப்பட வேண்டுமேன ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.