பைஸர் தடுப்பூசி செலுத்திக் கொண்ட ஐந்து மாணவிகள் சுகவீனமடைந்ததன் காரணமாக பொகவந்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பொகவந்தலாவ – சென்.மேரிஸ் மத்திய கல்லூரியில் இன்றையதினம் பைஸர் தடுப்பூசி ஏற்றிக் கொண்ட ஐந்து மாணவிகளே இவ்வாறு மயக்கமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பொகவந்தலாவை சென்.மேரிஸ் மத்திய கல்லூரி மற்றும் ஹொலி ரோசரி மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் கல்வி கற்றுவருகின்ற 12 வயது தொடக்கம் 16வயது வரையான மாணவர்களுக்கு இன்று காலை முதல் பைசர் தடுப்பூசி ஏற்றப்பட்டது.
2000 மாணவர்களுக்கு இதன்போது பைஸர் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது.