இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா கொரோனா தொற்றிற்குள்ளாகியுள்ளமை உறுதிப்[படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மாவை சேனாதிராசா நோய்வாய்ப்பட்ட நிலையில் யாழ் திருநெல்வேலியிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்தியகுழு கூட்டத்தில் கலந்து கொண்டு திரும்பியதன் பின்னர், அவருக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்ட நிலையில் அவர் , தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இதேவேளை இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்தியகுழு கூட்டத்தில் கலந்து கொண்ட பிரமுகர்கள் இன்று வடக்கில் நடைபெறும் பல்வேறு போராட்டங்களில் கலந்து கொள்ளவுளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.