வாட்ஸ் அப் செயலியை தற்போது வரை உலகம் முழுக்க கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
பலரின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாகவே வாட்ஸ் அப் மாறிவிட்டது.
வாட்ஸ் அப் செயலியில் பல விதமான அம்சங்கள் அடிக்கடி வெளியாகி கொண்டு இருக்கிறது. அதிலும் , வாட்ஸ் அப் மூலம் நீங்கள் பணம் அனுப்பலாம், வீடியோ மற்றும் ஆடியோ மூலம் சாட் செய்யலாம், வணிகம் மேற்கொள்ளலாம்.
இவையெல்லாம் லேட்டஸ்ட் அப்டேட். ஆனால், பலரும் ஒரே போனில் இரண்டு வாட்ஸ் அப் கணக்கை தொடங்க சிரமத்தை எதிர்கொள்கின்றனர்.
அதன்படி, ஒரே ஸ்மார்ட்போனில் இருக்கும் இரண்டு சிம்களிலும் வாட்ஸ் அப்-ஐ தனித்தனியாக பயன்படுத்த முடியுமாம்.
முதலில், பெரும்பாலான ஆண்ட்ராய்டுகளுக்கான செயல்முறைகள் ஒரே மாதிரியாக இருப்பதால், முதலில் உங்கள் மொபைலின் அமைப்புகளுக்கு செல்லுங்கள்.
இப்போ உங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனின் பிராண்டைப் பொறுத்து, குளோன் ஆப்ஸ் அல்லது டூயல் ஆப் அமைப்புகளைத் தேடவும்.
பின்னர் அமைப்புகளை கண்டறிந்த பின் அந்த அம்சத்தை திறந்து விருப்ப பட்டியலில், WhatsApp-ஐ தேடுங்கள். Facebook மற்றும் Instagram போன்ற பிற விருப்பங்கள் பெரும்பாலான தொலைபேசிகளில் கிடைக்கின்றன.
வாட்ஸ் அப்பைத் தேர்ந்தெடுத்து குளோனிங் அம்சத்தை இயக்கவும். இரண்டு பதிப்புகளும் தனித்து நிற்க புதிய ஆப் பதிப்புக்கு வேறு பெயரை கொடுக்கலாம்.
இப்போ முகப்புத் திரும்பினால், அங்கு நீங்கள் இரண்டு WhatApp-ஐகான்களைக் காண்பீர்கள். நீங்கள் இப்போது செய்ய வேண்டியது இரண்டு வாட்ஸ் அப்பிலும் தனித்தனி மொபைல் எண்களை கொடுத்து பயன்படுத்தலாம்.