கடந்த பொதுத் தேர்தலில் தோல்வியடைந்த பின்னரும் கொழும்பு மாதிவெல நாடாளுமன்ற உறுப்பினர்களின் குடியிருப்பில் வசித்து வருவதாக கூறப்படும் எட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக வழக்கு தாக்கலை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக நாடாளுமன்றத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
தோல்வியடைந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு குடியிருப்பில் தங்கியிருக்க வழங்கப்பட்ட கால அவகாசத்தையும் தாண்டி அவர்கள் அங்கு வசித்து வருகின்றனர்.
இதற்கான அபராதத்தை செலுத்த தவறிய குற்றத்திற்காக அவர்களுக்கு எதிராக வழக்கு தொடர தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அனுமதியின்றி ஒரு நாள் குடியிருப்பில் தங்கினால், 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். இந்த நாடாளுமன்ற உறுப்பினர் மொத்தமாக சுமார் 10 லட்சம் ரூபாயை அபராதமாக செலுத்த வேண்டியுள்ளது.
தோல்வியடைந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதிவெல குடியிருப்பில் இருந்து வெளியேறி இருந்தாலும் அவர்கள் அனுமதியின்றி தங்கி இருந்த காலத்திற்கான அபராதத்தை செலுத்தவில்லை.
இந்த தொகையை செலுத்துமாறு பல முறை அறிவித்தும், அவர்களை அதனை செலுத்தவில்லை என தெரியவருகிறது.
அபராதத்தை செலுத்த தவறிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளை சேர்ந்தவர்கள். தேர்தலில் தோல்வியடையும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்தல் நடக்கும் தினத்தில் இருந்து ஒரு மாத காலம் குடியிருப்பில் தங்கி இருக்க சட்ட ரீதியாக அனுமதி வழங்கப்படுகிறது.