இளையோர் உலக கிண்ண கிரிக்கட் இறுதி போட்டியில் 4 விக்கெட்டுகளால் வெற்றிப் பெற்ற இந்திய அணி, கிண்ணத்தை சுவீகரித்துள்ளது.
14-வது 19 வயதுக்கு உட்பட்ட இளையோர் கிண்ண கிரிக்கெட் போட்டி, மேற்கிந்திய தீவுகளில் இடம்பெற்ற நிலையில் இறுதிப்போட்டி, நேற்று இடம்பெற்றது
இதில் இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகள் பங்கேற்றன.
முதலில் துடுப்பாடிய இங்கிலாந்து அணி 44.5 ஓவர்களில் 189 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
எனினும் ஜேம்ஸ் ரீவ் 95 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்
இந்திய அணி தரப்பில் ராஜ்பவா 5 விக்கெட்டுகளையும், ரவிக்குமார் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதன்பின்னர் 190 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 47.4 ஓவர்களில் 6 விக்கட்டுக்கள் இழப்புக்கு 195 ஓட்டங்களை பெற்று போட்டியில் வெற்றிப்பெற்றது
நிஷாந்த் 50 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
இந்தநிலையில் இந்தப் போட்டியில் வெற்றிப்பெற்றதன் மூலம் இந்திய அணி, 5வது முறையாக வெற்றியாளர்( செம்பியன்) பட்டத்தை சுவீகரித்துள்ளது.




















