உடலை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள நாம் தேநீரை விரும்பி குடிப்போம். பல நாடுகளில் பல விதமான தேநீர்கள் சுவையுடனும், பல விலைகளிலும் விற்கப்படுகின்றன.
அந்த வகையில், இங்கே அதிக விலையில் விற்கும் காஃபியை பற்றி தெரிந்துகொள்வோம்.
ஜமைக்கன் புளூ மவுண்டைன் காஃபி
இந்த வகையான காபியானது சுமார் 5,000 அடி உயரத்தில் ஜமைக்கா நீல மலைகளில் பயிரிடப்படுகிறது. இங்கு தான் நீர் வரத்து அதிகமாக உள்ளது. இங்கு காபி கொட்டைகள் பதபடுத்தப்பட்டு அனுப்படுகிறது.
கசப்பு இல்லாத சுவை கொண்ட இதில், ஜப்பானில் இது பிரபலமானது. இதன் விலை 400 கிராம் சுமார் ரூ. 3,800 ரூபாயாம்.
செயின்ட் ஹெலினா காஃபி
இந்த வகையானது காபியானது, செயின்ட் ஹெலினா தீவில் அதை பயிரிட்டப்பட்டது. இந்த தீவு அட்லாண்டிக் பெருங்கடலின் நடுவில், ஆப்பிரிக்காவின் மேற்கு கடற்கரையிலிருந்து சுமார் 1,200 மைல் தொலைவில் அமைந்துள்ளது.
சுமார் 400 கிராம் ரூ. 6,000 ரூபாயாம். இந்த அதிக விலைக்கு காரணம் போக்குவரத்து செலவுகள் அதிகமாக இருப்பதும். இந்த பிராண்டின் காதலர்கள், உயர்தர, நறுமணமுள்ள கேரமல் சுவை உடையதால் அதிக விலை கொடுத்தும் வாங்குகிறார்கள்.
பிளாக் ஐவரி காஃபி
இந்த காபி கொட்டையானது தாய்லாந்தில் உள்ள பிளாக் ஐவரி காபி நிறுவனத்தால் அரபிகா காஃபி கொட்டை மூலம் இந்த காபி தயாரிக்கப்படுகிறது.
யானைகளை கொண்டு தயாரிக்கப்படும் இந்த காபி கொட்டையில் யானைகளின் வயிற்று அமிலம் காஃபி கொட்டை புரதங்களை உடைத்து, பானத்திற்கு ஒரு வலுவான சுவையை வழங்குகிறது.
அரிதாக கிடைக்கும் இந்த கொட்டையானது இதன் விலையும் அதிகம். ஒரு கப் கருப்பு ஐவரி காபிக்கு நீங்கள் சுமார் ரூ. 3,800 கொடுக்க வேண்டும். இது தற்போது உலகின் மிக விலையுயர்ந்த காபியாகும்.
மேலும், இந்த காபி 400 கிராமிற்கு இந்திய மதிப்பில் 37,000 ரூபாயாம்..
விலையுர்ந்த காபி பிராண்டுகள்
1.பிளாக் ஐவரி காஃபி – 400 கிராம் – விலை ரூ. 37,000
2. ஃபின்கா எல் இன்ஜெர்ட்டோ காஃபி – 400 கிராம விலை ரூ. 37,000
3. ஹாசின்டா லா எஸ்மெரால்டா – 400 கிராம விலை ரூ. 37,000
4. கோபி லூவாக் – 400 கிராம விலை ரூ. 12,000
5. செயின்ட் ஹெலினா காஃபி – 400 கிராம விலை ரூ. 6,000
6. ஜமைக்கன் புளூ மவுண்டைன் காஃபி – 400 கிராம விலை ரூ. 3,800
7. பாசண்டா சான்டா இன்ஸ் – 400 கிராம விலை ரூ. 3,800
8. ஸ்டார்பக்ஸ் குவாடிரிஜின்அக்டுபில் ஃபிராப் – 400 கிராம விலை ரூ. 3,500
9. லாஸ் பிலான்ஸ் காஃபி – 400 கிராம விலை ரூ. 3,000
10. ஹவாய்யன் கோனா காஃபி – 400 கிராம விலை ரூ. 2,500