வட மாகாணத்தில் கோவிட் இரண்டாம் மற்றும் பூஸ்டர் தடுப்பூசிகளை பெறாதவர்கள் உரிய காலத்துக்குள் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ளுமாறு வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கோவிட்- 19 நோயிலிருந்து மக்களைப் பாதுகாக்கும் பொருட்டு அரசாங்கம் தடுப்பூசிகளை வழங்கி வருகிறது. இதன் அடிப்படையில் வடக்கு மாகாணத்திலும் கோவிட் தடுப்பூசிகள் வழங்கப்பட்டு தற்போது மூன்றாவது பூஸ்டர் தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகள் இடம்பெற்று வருகிறது.
ஆகவே இரண்டாம் தடுப்பூசிகளைப் பெறாதவர்கள் விரைவாகத் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்வதோடு இரண்டாவது தடுப்பூசிகளைப் பெற்றுக் கொண்டவர்கள் மூன்றாவது பூஸ்டர் தடுப்பூசி தவறாமல் பெற்றுக் கொள்ளுமாறு அவர் மேலும் கேட்டுக்கொண்டார்.