இலங்கை வாழ் மக்கள் போசாக்கில் குறைந்த மலிவான உணவு வகைகளை உட்கொள்வதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
உணவுப் பொருட்களின் விலை உயர்வினைத் தொடர்ந்து, குறைந்த விலையைக் கொண்ட பேசாக்கற்ற உணவு வகைகளை கொள்வனவு செய்யும் பழக்கம் மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் இணை நிறுவனமொன்றான GIEWS என்ற அமைப்பினால் இந்த விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
நாட்டின் பெரும்பான்மையான மக்கள் உணவுப் பொருள் அதிகரிப்பு காரணமாக கூடுதல் கலோரிகளைக் கொண்ட உணவுப் பொருட்களுக்கு பதிலாக மலிவான, போசாக்கு குறைந்த மாற்று உணவு வகைகளை உட்கொள்ளத் தொடங்கியுள்ளனர்.
நாட்டு மக்களின் பிரதான உணவான அரிசியின் விலை அதிகரிப்பும் இந்த நிலைமைக்கு பிரதானமான ஓர் ஏது என ஐக்கிய நாடுகள் அமைப்பின் உணவு மற்றும் விவசாய நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.