ஐரோப்பிய நாடுகள் இருந்து வந்த பொதிகளில் போதைப்பொருட்கள் மீட்கப்பட்டதாக இலங்கை சுங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.
மத்திய தபால் பரிமாற்று நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, 9 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருள் அடங்கிய 5 பொதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்தப் பொதிகள் பிரித்தானியா, ஜேர்மன், கனடா ஆகிய நாடுகளிலிருந்து வந்துள்ளன. தனியார் முகவர் நிறுவனங்கள் மூலம் இவை அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
கொழும்பு மற்றும் கம்பஹா பகுதிகளை சேர்ந்தவர்களுக்கு போலியான முகவரியிட்டு பொதிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குஷ் எனப்படும் கஞ்சா 472 கிராமும் 302 போதை வில்லைகளும் சிக்கியுள்ளன. கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்திடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் உயிர் ஆபத்தை ஏற்படுத்தும் பொருட்களாக போதைப்பொருளை அரசாங்கம் பிரகடனம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.