பலருக்கும் திராட்சை என்றால் ரொம்பவே பிடிக்கும். திராட்சையில் அளவுக்கு அதிகமாக வைட்டமின்கள், தாதுக்கள், ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.
ஆனால், இதனை அதிகளவில் சாப்பிட்டால் ஆபத்து தான். திராட்சையானது சர்க்கரை வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும்.
எனவே வயிற்று பிரச்சனை ஏதும் இருந்தால், திராட்சையை அதிகமாக உட்கொள்ள வேண்டாம்.
மேலும், இதில் காணப்படும் பாலிபினால்கள் காரணமாக கர்ப்ப கால குழந்தைக்கு கணைய பிரச்சினைகள் ஏற்படலாம்.
எனவே குறைந்த அளவில் திராட்சையை உட்கொள்ளுங்கள்.
அதிக திராட்சை சாப்பிடுவதால், நாள்பட்ட சிறுநீரக நோய் அல்லது சர்க்கரை பிரச்சனை இருப்பவர்களுக்கு பாதிப்பு ஏற்படும்.
ஒரு கப் திராட்சையில் அதாவது 100 கிராமில் கிட்டதட்ட 70 கலோரிகளுக்கு மேல் உள்ளது.
மற்ற பழங்களை போலவே திராட்சையிலும் நார்ச்சத்துக்கள் அதிகமாக உள்ளன.
இந்த நோய்களுக்கான மருந்துகளை எடுத்துக் கொண்டால், திராட்சை சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.
அடுத்து, திராட்சையின் தோல் பகுதியில் இயற்கையாகவே ஒருவித மெழுகு போல் படிந்திருக்கும்.
அதுகூட சருமத்தில் அரிப்பு மற்றும் அழற்சி ஆகியவை ஏற்படக்கூடும்.
ஒரு வருடத்திற்கும் குறைவான வயதுடைய குழந்தைகளுக்கு திராட்சைப் பழம் கொடுப்பதைத் தவிர்ப்பது நல்லது.