சர்வதேச சந்தையில் தங்கம் விலை ஒரு அவுன்ஸ் 1900 டொலர் வரையில் உயர்ந்து 8 மாத உயர்வை எட்டியுள்ளது.
ரஷ்யா – உக்ரைன் போர் பதற்றம், உலக நாடுகளில் அதிகரித்து வரும் பணவீக்கம், அமெரிக்கப் பெடரல் வங்கியின் வட்டி உயர்வு போன்ற காரணிகளினால் முதலீட்டாளர்கள் பெருமளவு தங்கத்தில் முதலீடு செய்த காரணத்தால் சர்வதேச சந்தையில் தங்கம் விலை உயர்ந்துள்ளது.
இதன் காரணமாக தங்கம் விலை சற்றும் எதிர்பார்க்காத வகையில் 1900 டொலர் வரையில் உயர்ந்து 8 மாத உச்சத்தை தொட்டுள்ளது.
முதலீட்டு சந்தை அதிகளவிலான தடுமாற்றத்தை எதிர்கொண்டுள்ளமையினால் தங்கம் வாங்க காத்திருப்போர் காத்திருந்து தங்கம் வாங்குவது சிறந்தது எனவும் நிபுனர்கள் கணித்துள்ளனர்.