இலங்கை முற்றுமுழுதாக இறக்குமதியை நம்பியே மாறியுள்ளதாகவும்,இலங்கையின் தேசிய கொடிகள் சீனாவிலிருந்தே அதிகளவு இறக்குமதி செய்யப்படுவதாகவும் எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
கொழும்பில் நடைபெற்ற தேசிய சுதந்திர தின கொண்டாட்டங்களில் பயன்படுத்தப்பட்ட பெரும்பாலான இலங்கை தேசிய கொடிகள் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவை.
வெசாக் விளக்குகள் கூட சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதாகவும்,இலங்கை தொடர்ந்தும் அனைத்தையும் இறக்குமதி செய்தால் டொலர்கள் எஞ்சியிருக்காது எனவும் கம்மன்பில தெரிவித்துள்ளார்.