ரஷ்யா நீண்ட தொலைவு சென்று தாக்கும் ஏவுகணைகளை சோதனை செய்து போர் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.
இவ்வாறான சூழ்நிலையில், ரஷ்யா – உக்ரைனுக்கு இடையே நீடிக்கும் பதற்றம் போராக மூண்டால் பேரழிவை ஏற்படுத்தும் எனவும் ஐ.நா. கவலை வெளியிட்டுள்ளது.
உக்ரைன் எல்லையில் 1 லட்சத்துக்கு மேற்பட்ட இராணுவ வீரர்களை குவித்துள்ள ரஷ்யாவினால் உலக நாடுகள் மிகுந்த அச்சத்தில் உள்ளன.
இந்த பதற்றத்துக்கு மத்தியில் ரஷ்யா இன்று ஏவுகணை சோதனைகள் நடத்தி அதிர வைத்துள்ளது.
ஹைபர்சோனிக் பாலிஸ்டிக் ஏவுகணை, அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் கொண்ட ஏவுகணை சோதனைகளையும் ரஷ்யா வெற்றிகரமாக நடத்தியுள்ளது.
இருப்பினும், தங்களின் திட்டமிடப்பட்ட பயிற்சியின் ஒரு அங்கமாகவே இந்த ஏவுகணை சோதனை நடத்தப்பட்டதாக ரஷ்யா விளக்கமளித்துள்ளது.
உக்ரைன் மீது போர் தொடுக்கப்போவதில்லை என்றும், உக்ரைன் எல்லையில் இருந்து படைகளை வெளியேற்றி வருவதாகவும்,ரஷ்யா கூறும் கூற்றில் உண்மை இல்லை எனவும் அமெரிக்காவும், உக்ரைனும் கூட்டாக எச்சரிக்கை விடுத்துள்ளன.