எரிபொருட்களின் விலைகள் உயர்த்தப்பட வேண்டுமென மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
டுவிட்டர் பதிவொன்றின் மூலம் நாட்டில் எரிபொருள் விலைகளில் திருத்தம் செய்ய வேண்டிய காலம் வெகுவாக தாமதிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
பிராந்திய வலயத்தின் சில நாடுகளுடன் ஒப்பீடு செய்யும் போது இலங்கையில் டீசலின் விலை அந்த நாடுகளின் விலைகளிலும் அரைவாசி அளவாகும் என தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கடந்த டிசம்பர் மாதம் எரிபொருட்களின் விலைகள் உயர்த்தப்பட்டிருந்தன.
அதன் பின்னர் இந்த மாத ஆரம்பத்தில் லங்கா இந்தியன் ஒயில் நிறுவனம் எரிபொருட்களின் விலையை அதிகரித்திருந்தது.
ஆப்கானிஸ்தான், பூட்டான், இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம் உள்ளிட்ட நாடுகளை விடவும் இலங்கையில் எரிபொருட்களின் விலைகள் குறைவு என மத்திய வங்கியின் ஆளுநர் கப்ரால் சுட்டிக்காட்டியுள்ளார்.