18 ஆண்டுகளாக 47 கிலோ கட்டியுடன் வலியால் துடிதுடித்த பெண்னை மருத்துவர்கள் காப்பாற்றியுள்ளனர்.
குஜராத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் 56 வயதான பெண் வயிற்று வலியுடன் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு 47 கிலோவில் வயிற்றில் கட்டி இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டு மருத்துவர்களினால் அகற்றப்பட்டுள்ளது.
இது இந்தியாவில் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்ட மிகப்பெரிய கருப்பை அல்லாத கட்டி என்று கூறப்படுகிறது.
அகமதாபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையின் 8 மருத்துவர்கள் கொண்ட குழு 47 கிலோ எடையுள்ள கட்டியை அறுவை சிகிச்சை மூலம் அகற்றியுள்ளனர்.
18 ஆண்டுகளாக, அந்தப் பெண் கட்டியைச் சுமந்துகொண்டு படுத்த படுக்கையாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.