பிக்பாஸ் தமிழ் சீசனை நடிகர் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது நடைபெற்று வரும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்நிலையில், சனி மற்றும் ஞாயிற்றுகிழமையில் கமல் தொகுத்து வழங்க மாட்டார் எனகூறப்படுகிறது.
அதற்கு காரணமாக இடைவிடாத படப்பிடிப்பு மற்றும் அரசியல் பணிகள் இருப்பதால் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து தற்காலிகமாக வெளியே வரப் போவதாகவும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சிக்கு அவர் மீண்டும் திரும்புவார் என்று கூறப்படுகிறது.
அப்படி கமல் வெளியேறினால், மீண்டும் ரம்யா கிருஷ்ணனே தொகுத்து வழங்குவார் என தெரிகிறது.