எந்த ஒரு தொற்றுக்கிருமி உருமாறி வந்தாலும் அதனை அழித்து நமக்கு ஆனந்தமளிக்கும் மருந்து நம்மிடமே உள்ளது. இந்த யோகக் கூட்டணியுடன் இணையுங்கள்.
நிமிர்ந்து அமரவும். கை சின் முத்திரையில் வைக்கவும். இரு நாசி (மூக்கு) வழியாக மிக மிக மெதுவாக முடிந்த அளவு மூச்சை இழுக்கவும். உடன் மிக மிக மெதுவாக மூச்சை இரு நாசி வழியாக வெளிவிடவும். மீண்டும் இதே போல் நிதானமாக மூச்சை இழுத்து மிக மெதுவாக மூச்சை வெளிவிடவும். மூச்சை வெளியிடும்பொழுது உடல் முழுக்க மூச்சு பரவுவதாக எண்ணவும். ஒவ்வொரு அணுக்களும் மூச்சாற்றல் பெறுவதாக என்னனவும்.இவ்வாறு இருபது முறைகள் செய்யவும். இதனை காலை மதியம் மாலை இரவு சாப்பிடுமுன் பயிற்சி செய்யவும்.
பலன்கள்: உடல் முழுக்க பிராண சக்தி நன்றாக இயங்கும். நுரையீரல் இயக்கம் மிகச் சிறப்பாக இருக்கும். நல்ல காற்றை நுரையீரல் உள்வாங்கி, அசுத்தக் காற்றை வெளியேற்றும். எந்த ஒரு தொற்றுக்கிருமியும், வைரசும் உடலில் தங்காமல் வாழ நுரையீரல் இயக்கம் நன்றாக இருக்கும். பயமின்றி வாழலாம்.
யோகாசனம், முத்திரை, மூச்சுப்பயிற்சி, தியானம் போன்றவற்றை தினமும் காலை மாலை பயிற்சி செய்யுங்கள். உணவில் ஒழுக்கத்தை ஏற்படுத்துங்கள். பசித்தால் மட்டும் பசியறிந்து நல்ல சாத்வீகமான உணவை எடுத்துக் கொள்ளுங்கள். ஏதேனும் ஒரு நேரம் அறைமுறி தேங்காய் இரு வாழைப்பழம் மட்டும் உணவாக எடுத்துக் கொள்ளுங்கள். இரவு 10 மணி முதல் அதிகாலை 3 மணி வரை உடலுக்கு ஓய்வு கொடுங்கள். உடலை காக்கும் மருந்து உயிர்தான், எந்த ஒரு தொற்றுக்கிருமி உருமாறி வந்தாலும் அதனை அழித்து நமக்கு ஆனந்தமளிக்கும் மருந்து நம்மிடமே உள்ளது. இந்த யோகக் கூட்டணியுடன் இணையுங்கள்.