உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் பச்சைப்பயறை ஒரு நேர உணவாகச் சாப்பிட்டு வரலாம். வயிற்றுப்புண்ணை குணப்படுத்துவதற்கு பச்சைப்பயறை சாப்பிட்டு வரலாம்.
தேவையான பொருட்கள்:
பச்சைப்பயறு – 100 கிராம்
வெங்காயம் – 1
தக்காளி – 2
காய்ந்த மிளகாய் – 3
பூண்டு – 4 பல்
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
தாளிக்க
எண்ணெய் – 1 டீஸ்பூன்
கடுகு – அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை – 10 இலைகள்
சீரகம் – ஒரு டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 2
செய்முறை :
பூண்டுப் பல்லைத் தோலுடன் இடித்துக்கொள்ளவும்.
தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணீர் ஊற்றி, அதில் பச்சைப்பயறு, இடித்த பூண்டு, தக்காளி, வெங்காயம், மஞ்சள் தூள், சிறு துண்டுகளாக உடைத்த காய்ந்த மிளகாய் சேர்த்து வேகவிடவும்.
பருப்பு வெந்ததும் உப்பு சேர்த்து நன்கு மசிக்கவும் (உப்பை கடைசியில்தான் சேர்க்க வேண்டும், இல்லாவிட்டால், பருப்பு வேகாது).
தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்து மசியலில் சேர்க்கவும்.
இப்போது சத்தான பச்சைப்பயறு மசியல் ரெடி.