இலங்கையின் பணவீக்கம் 16.8 வீதமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட சமீபத்திய அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் பணவீக்கம் 2021 டிசம்பரில் 14.0 வீதமாக காணப்பட்டதாகவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், 2022 ஜனவரியில் இலங்கையில் பணவீக்கம் 16.8 வீதமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.




















